டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: ஓரங்கட்டப்பட்ட கில்!

அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. மேலும் நியூசிலாந்து டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை மற்றும் நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி இன்று (டிசம்பர் 20) அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத கில் மற்றும் ஜிதேஷ் ஷர்மாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்குப் பதிலாக ரிங்கு சிங், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில், அக்ஷர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ரானா, ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங், ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 21 முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Related Posts

டி20 கிரிக்கெட்: புதிய உலக சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். கர்நாடகாவில் உள்ள தர்மசாலாவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு…

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு கொல்கத்தாவில் உற்சாக வரவேற்பு

கொல்கத்தா விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வருகை தந்த கால்பந்து ஜாம்பவான் லியோனஸ் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானும், உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி(38). பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *