பல்வேறு குளறுபடிகளுடன் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. இதில் சென்னையில் அதிகபட்சமாக 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை: 97,37,832
முதல்வர் தொகுதி நிலவரம்!
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 ஓட்டுக்களும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தொகுதியான எடப்பாடியில் 26,375 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் ஓட்டை எப்படி பார்ப்பது?
S.I.R. பணிகளுக்கு பிறகு உங்கள் ஓட்டு பத்திரமாக இருக்கிறதா.? என்பதை சரி பார்க்க இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான electoralsearch.eci.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், உங்கள் வாக்குச்சாவடியில் நீக்கப்பட்டவர்கள் குறித்து விவரங்கள் அறிய https://erolls.tn.gov.in/asd/ என்ற இணையதளத்தை பயன்படுத்தவும்.



