மதுரை எல்ஐசி அலுவலகத்தில் இரவில் தீ விபத்து: பெண் மேலாளர் பலி

மதுரையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெண் மேலாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் எல்ஐசி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 50 பேர் பணியாற்றி வருகின்றனர். புதிய பாலிசி இன்று (டிசம்பர் 18 ) அறிமுகப்படுத்த அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று இரவு ஊழியர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்து ஊழியர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரவு 8.30 மணி அளவில் அந்த அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள அனைத்து அறைகளிலும் வேகமாக பரவத்தொடங்கியது. இதனால் ஊழியர்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். ஆனால், சிலர் மட்டும் கட்டிடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் மற்றும் திடீர் நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக வேகமாக மீட்கும் பணி நடந்தது. ஆனால், அதற்குள் தீ பெரும் அளவில் பரவிவிட்டது. கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் நெல்லையைச் சேர்ந்த எல்ஐசி முதுநிலை மேலாளர் கல்யாணி ( 55) உடல் கருகி பலியானார். அவரது உடலை மீட்டனர். அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம்(44), தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என தெரியவருகிறது. இதனையடுத்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

கணவரை தாக்கிவிட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை – தப்பியோடிய போதை இளைஞர்களை தேடும் போலீசார்

ராமேஸ்வரத்தில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதுபோதை இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரத்தை அடுத்த மல்லிகா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஆரோக்கியம். இவர் தனது மனைவியுடன் வீட்டிற்கு  தேவையான பொருட்களை வாங்கிக்…

எம்.ஜி.ஆரின் 38-வது ஆண்டு நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு

எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாளான டிச.24-ம் தேதி அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *