தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திர பதிவாளர்களுக்கும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் “லஞ்ச பணம்” கொடுக்க வேண்டுமென அமைச்சர் மூர்த்தி தரப்பில் கரார்! பேரம் பேசி வசூலிக்கப்படுதாக மதுரை தெற்கு மாவட்ட பாமக செயலாளர் முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
“லஞ்ச வேட்டை”
இந்த “லஞ்ச வேட்டை” குறித்து பாமக நிர்வாகி முருகன் கூறியதாவது, “மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பத்திர பதிவாளர்களிடமும் தற்போது ஒரு டார்கெட் வைக்கப்படுகிறது. மாண்புமிகு அமைச்சர் மூர்த்தி தரப்பிடம், அனைத்து பத்திர பதிவாளர்களும் உடனடியாக ரூ.20 முதல் ரூ.40 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அனைவரும் பணிமாறுதல் செய்யப்படுவார்கள் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பணம் யார் கைக்கு போகிறது..?
இது பதிவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘லட்சக்கணக்கான லஞ்ச பணத்தை’ அமைச்சர் கேட்கிறாரா? இல்லை அவரது பெயரை பயன்படுத்தி அவரின் உதவியாளர்கள் அல்லது வேறு நபர்கள் கேட்கிறார்களா? என்பது தெரியவில்லை என்று பதிவாளர்கள் புலம்புகிறார்கள்.
அப்பாவி மக்கள் பாதிப்பு :-
இந்த டார்கெட்டால் பத்திர பதிவு செய்ய வரும் அப்பாவி ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். அது மட்டுமின்றி அனைத்து பதிவாளர்களையும் தவறான பாதைக்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
போராட்டம் நடைபெறும்!
எனவே, தேர்தல் நேரத்தில் திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டுகிறார்கள். இந்த விவகாரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு கிடைக்க கடுமையான போராட்டம் நடைபெறும் என்று
பாமக நிர்வாகியான முருகன் கூறியுள்ளார்.


