2026-ம் ஆண்டிற்கான உத்தேச தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி (TNPSC) வெளியிட்டுள்ளது.

தேர்வு உத்தேச பட்டியல் (6)
இதன்படி, குரூப் 1 – செப்.6,
குரூப் 2/ 2A -அக்.25,
குரூப் 4 – டிச.20,
தொழில்நுட்பத் தேர்வு (நேர்காணல்) – நவ. 14,
நேர்காணல் இல்லாதது ஆக.3,
டிப்ளமோ/ ஐடிஐ அளவிலான தொழில்நுட்பத் தேர்வு – செப்.20 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு தேர்தல் வருவதால், அனைத்து தேர்வுகளும் ஜூலைக்கு பிறகே தொடங்குகிறது.
வெறும் 6 தேர்வுகள் தானா..?
இருப்பினும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைவாக, அதாவது வெறும் 6 தேர்வுகளை மட்டுமே டி.என்.பி.எஸ்.சி (TNPSC) நிர்வாகம் அடுத்தாண்டு நடத்த உள்ளது.
இது அரசு வேலையை கனவாகக் கொண்டுள்ள லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அதிகபடியான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-1, குரூப்-2/2A, குரூப்-4 தேர்வுகள் தேர்வு அட்டவணையில் இடம்பெற்றுள்ளதால் தேர்வர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
குரூப்-4 தேர்வு அடுத்தாண்டி டிசம்பர் மாதம் தான் நடைபெறும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்களின் கோரிக்கை
முறையாக வினாத்தாள்களை தயார் செய்யாதது, வினாக்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் போது பிழையாகவே! இருப்பது; புத்தகத்தை தாண்டி – பாடத்திட்டத்தை தாண்டி பல்வேறு இடங்களில் இருந்து புரியாத வினாக்களை கேட்பது என பல்வேறு குளறுபடிகள் டிஎன்பிஎஸ்சி நிர்வாக தரப்பில் இருப்பதாக தேர்வர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அடுத்த ஆண்டு நடைபெறும் குரூப் தேர்வுகளிலாவது வினாத்தாள்கள் முறையாக சரியாக இருக்குமா என தேர்வர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.


