கலிபோர்னியா பாலைவனத்தில் விமானப்படை விமானம் நொறுங்கி விழுந்தது. அதில் இருந்த விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பினார்.
அமெரிக்க விமானப்படை தண்டர்பேர்ட்ஸ் எப்-16 என்ற போர் விமானத்தில் இருந்த விமானி, வான்வெளியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னார்டினோ கவுண்டியில் உள்ள டெத் வேலிக்கு சற்று தெற்கே உள்ள ட்ரோனா விமான நிலையத்திற்கு அருகில் பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பாலைவனம் அருகே திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அந்த விமானத்தில் இருந்த விமானி பாராசூட்ட மூலம் கீழே குதித்தார். தற்போது உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிச்சைக்காக ரிட்ஜ்கிரெஸ்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விமானம் பாலைவனத் தளத்தில் மோதுவதற்கு முன்பு, விமானி பாராசூட்டில் இருந்து குதித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரிய தீப்பந்தம் போன்று விமானம் தீப்பிடித்து எரிவதும், அடர்த்தியான கரும்புகை வானத்தை நோக்கி செல்லும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து நடந்த இடம் கடற்படை ஆராய்ச்சி மற்றும் சோதனைத் திட்டங்களை ஆதரிக்கும் கடற்படை விமான ஆயுத நிலையமான சீனா ஏரிக்கு அருகில் உள்ளது. விபத்து நடந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று விமானியை காப்பாற்றினர்.


