வெளியான நீட் தேர்வு முடிவுகள்.. இந்திய அளவில் முதல் 100 இடங்களில் 6 தமிழ்நாட்டு மாணவர்கள்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வு கடந்த மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்விற்கு மொத்தம் 22,76,069 பேர் பதிவு செய்தனர். அதில் 22,09,318 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 12,36,531 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 5,14,063 பேர் ஆண்கள், 7,22,462 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.

  • Related Posts

    தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு- மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு

    10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வுகளை தொடர்ந்து நடத்தப்படும். இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத் தேர்வு கிடையாது என்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மாற்றாக,…

    TNEA | பொறியியல் கலந்தாய்வு: மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வெளியீடு

    இளநிலைப் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். மாணவர்கள் சேர்வதற்கான…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *