தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.

தேர்வர்களின் கவனத்திற்கு..!
- நாளை பல இளைஞர்கள் எழுதவுள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பார்ப்போம்!
- காவலர் தேர்வுக்கு, நாளை (09.11.25) காலை 8.00 மணி முதல் 9.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும்.
- முறைகேட்டை தடுக்க முதல்முறையாக காவலர் தேர்வில் விண்ணப்பதாரரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.
- தேர்வறைக்குள் செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடையாது.
- தேர்வு நுழைவுச்சீட்டுடன் ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் என ஏதேனும் ஒரு அசல் ஆவணம் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைவான காலிப் பணியிடங்கள்
இருப்பினும், ஆயிரக்கணக்கான காவலர்கள் பணி தமிழ்நாடு அரசு காவல்துறையில் நிரப்ப வேண்டியுள்ள சூழ்நிலையில் வெறும் 3000, 4000 காலிப் பணியிடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.


