பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்வில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்,பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
டெலிகாம் பிரிவில் 95, பைனான்ஸ் பிரிவு 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பள வரம்பு 24,900 ரூபாயிலிருந்து 50,500 ரூபாய் வரையாகும். கல்வித்தகுதி B.Tech/B.E, CA, வயது வரம்பு என்பது 21 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


