அமேசான்(Amazon), இன்டெல் (INTEL), மைக்ரோசாப்ட் (Microsoft), டிசிஎஸ் (TCS) உள்பட 218 பன்னாட்டு நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2022-ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27,000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தது. தற்போது 30 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
ஐடி நிறுவனங்கள் செய்யும் வேலை
ஏ.ஐ தொழில்நுட்பத்தின் வருகையால் இந்த பணி நீக்கும் நடைபெற்றுள்ளதாக சொல்லப்பட்டாலும்; பன்னாட்டு நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் இதை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது 10 பேர் பார்த்து வந்த வேலையை, 6 ஊழியர்களை பார்க்க வைத்து 4 ஊழியர்களின் சம்பளத்தை மிஞ்சப்படுத்தும் நோக்கத்தில் இதை ஐடி (IT) நிறுவனங்கள் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அமேசான் மீது குற்றச்சாட்டு
பிளிப்கார்ட் நிறுவனத்தை விட வேறு இ-காமர்ஸ் நிறுவனங்களை விட அமேசான் தான் சந்தையில் முதல் இடத்தில் இருக்கிறது. நஷ்டத்தால், தொழில் போட்டியால் இந்த பணிநீக்கம் நடக்கவில்லை என்றும், இது முழுக்க முழுக்க லாப குவிப்பில் இருக்கக்கூடிய நடவடிக்கை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

நீக்கப்பட்ட 30,000 பேருக்கு கொடுத்துக்கொண்டு இருந்த சம்பளத்தை நிறுத்திவிட்டு புதிதாக இவர்களைவிட குறைவான சம்பளம் வாங்கக் கூடியவர்களை வேலைக்கு எடுப்பது அல்லது, இவர்கள் செய்து கொண்டு இருந்த வேலையை, ஏற்கனவே வேலையில் இருப்பவர்களிடம் கொடுத்து பணிசுமையை அதிகரிக்கலாம் என்பது தான் அமேசான் நிறுவனத்தின் திட்டம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இன்டெல் :-
இன்டெல் நிறுவனம் இந்தாண்டு 24,000 பணியாளர்களை குறைக்க உள்ளது. இதன் மூலம் அதன் பணியாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 75,000 குறைய வாய்ப்புள்ளது.
டிசிஎஸ் (TCS)
டிசிஎஸ் (TCS) நிறுவனம் இந்தாண்டு 20,000 பணியிடங்களை குறைக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 9000 ஊழியர்களை குறைத்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவல் தகவல் தொழில்நுட்ப இந்த துறையில் பெரும் அதிர்பழியை ஏற்படுத்தி உள்ளது.
ஐடி துறையை நம்பி இந்தியாவில் கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளார்கள். அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி? எழுந்துள்ளது.


