அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாதவர் செங்கோட்டையன்…எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாதவர் செங்கோட்டையன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சேலத்தில் அவர் இன்று  செய்தியாளர்களிடம் கூறுகையில், ” அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்ததற்காக கட்சி சார்பற்ற பாராட்டு விழாவில் நான் பங்கேற்றேன். ஆனால், செங்கோட்டையன் பங்கேற்காமல், அந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாததால் பங்கேற்கவில்லை என்று கூறினார். ஆனால், தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றார். அந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் தான் இருந்தன. சைக்கிள் கொடுக்கும் விழாவில் எங்கே ஜெயலலிதா படம் எங்கே?

அதிமுகவிலிருந்து பிரிந்துசென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், செங்கோட்டையன் சொல்பவர்கள் எல்லாம் பிரிந்து சென்றவர்கள் இல்லை. கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள். டி.டி.வி.தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா கட்சியில் இருந்து நீக்கினார். இவர் எல்லாம் அதிமுகவை பற்றி கருத்துக் கூறக்கூடாது. கட்சிக்கு ஒ.பன்னீர்செல்வம் உண்மையாக இல்லை. இணைந்து பணியாற்றலாம் என்ற போது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போம் அவர் கட்சிக்கு உண்மையாக இல்லை. ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ஆகியோர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து பேசுகிறார்கள். திமுகவை ஆட்சியில் அமர்த்த பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விரும்புகிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததாக சொல்லும் செங்கோட்டையனை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதே ஜெயலலிதா தான். நான் முதலமைச்சரான பின் தான் செங்கோட்டையனை அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் நியமித்தேன். அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாதவர் செங்கோட்டையன். அதிமுகவிற்கு எதிராக ஆறு மாதங்களாக இருந்தார். அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

செங்கோட்டையன் இதுவரை திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அவர் பி டீம் என்பது நிரூபணமாகியுள்ளது. 53 ஆண்டு இருந்தோம் என்று சொன்னால் மக்களுக்காக உழைத்து இருக்க வேண்டும். நிர்வாகிகளை அனுசரித்து சென்றால் உங்களை வாழ்த்தி இருப்பார்கள். இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்களுக்கு இந்த நிலை தான் கிடைக்கும்.

கோடநாடு குறித்து செங்கோட்டையன் பேட்டி கொடுத்து இருக்கிறார். அதிமுக ஆட்சியில் இருந்த போது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கிறேன். 2,3 கொலை நடந்துள்ளது என்று சொல்கிறார். இத்தனை ஆண்டுகளாக செங்கோட்டையன் எவ்வளவு வன்மத்தோடு இருக்கிறார் பாருங்கள். இவரையெல்லாம் கட்சியில் வைத்திருந்தால் எப்படி இருக்கும்? இது எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இவர்கள் தனக்கு பதவி இல்லை என்றால் எந்த நிலைக்கும் போவார்கள். 2026-ம் நடைபெற உள்ள தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவது தான் அவர்களின் விருப்பம். 2016-ல் ரத்தம் சிந்தி ஜெயலலிதா அதிமுக ஆட்சியை அமர்த்தி கொடுத்தார்கள். துரோக செயல்களில் ஈடுபட்டவர்கள் தான் இன்றைக்கு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்” என்றார்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *