நாளை காவலர்களுக்கான தேர்வு : தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.

தேர்வர்களின் கவனத்திற்கு..!

  • நாளை பல இளைஞர்கள் எழுதவுள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பார்ப்போம்!
  • காவலர் தேர்வுக்கு, நாளை (09.11.25) காலை 8.00 மணி முதல் 9.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும்.
  • முறைகேட்டை தடுக்க முதல்முறையாக காவலர் தேர்வில் விண்ணப்பதாரரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.
  • தேர்வறைக்குள் செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடையாது.
  • தேர்வு நுழைவுச்சீட்டுடன் ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் என ஏதேனும் ஒரு அசல் ஆவணம் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான காலிப் பணியிடங்கள்

இருப்பினும், ஆயிரக்கணக்கான காவலர்கள் பணி தமிழ்நாடு அரசு காவல்துறையில் நிரப்ப வேண்டியுள்ள சூழ்நிலையில் வெறும் 3000, 4000 காலிப் பணியிடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

ஐடி நிறுவனங்கள் செய்யும் வேலை : “எப்போ நடக்குமோ! என்ற பயத்தில் ஐடி ஊழியர்கள்”

அமேசான்(Amazon), இன்டெல் (INTEL), மைக்ரோசாப்ட் (Microsoft), டிசிஎஸ் (TCS) உள்பட 218 பன்னாட்டு நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27,000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம்…

ரூ.50,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா?…பிஎஸ்என்எல் நிறுவனம் அழைக்கிறது!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்வில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில்  120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *