NEET Result : நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. ரிசல்ட் தெரிந்து கொள்வது எப்படி?

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகள் முடிவுகள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்களும், தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியரும் நீட் தேர்வை எழுதினர்.
மாணவர்கள் தங்கள் முடிவுகளை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://neet.nta.nic.in தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு பதிவுசெய்யப்பட்ட மின்அஞ்சலில் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • Related Posts

    TNEA | பொறியியல் கலந்தாய்வு: மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வெளியீடு

    இளநிலைப் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். மாணவர்கள் சேர்வதற்கான…

    AI தொழில்நுட்பத்தில் பாடப்புத்தகம் அறிமுகம்… அசத்திய மதுரை அரசுப்பள்ளி ஆசிரியர்கள்..!!

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் பகுதியில் அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி 1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *