திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வரும் ஜூலை 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஜூலை 1-ந் தேதி முதல் 7 நாட்கள் வேள்விச்சாலை நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை தமிழில் வேதங்கள் ஓத வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில், வருகின்ற 07.07.2025 அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. நன்னீராட்டு பெருவிழாவிற்கு 8000 சதுர அடி பரப்பளவில், 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமான வேள்விச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

  • Related Posts

    பவுர்ணமி கிரிவலம் போலாமா? – திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு

    பவுர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலை- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு படையெடுப்பார்கள். இந்த மாத பவுர்ணமி கிரிவலம்…

    திருவண்ணாமலை கோயிலுக்குள் செல்போனுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன்களை கொண்டுசெல்ல தடைவிதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தரிசனத்துக்கு சாதாரண நாட்களில் கூட 2 முதல்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *