இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தலில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினைச் செலுத்தினார்.

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீன் தன்கர்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்த அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ம் தேதி நிறைவு பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகியோர்போட்டியிடுகின்றனர்.

ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம், இந்த தேர்தலில் பங்களிக்கப் போவது இல்லை என தெரிவித்துள்ளது. இதே போல பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியும் தேர்தலைப் புறக்கணித்துள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவு இன்று மாலையே தெரிய வரும்.

Related Posts

டெல்லி கார் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்க வேண்டாமா?- திருமாவளவன் கேள்வி!

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே பொறுப்பேற்க வேண்டும் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக திமுக மனு… உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆர்) எதிராக திமுக தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 11) நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *