
இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தலில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினைச் செலுத்தினார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீன் தன்கர்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்த அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ம் தேதி நிறைவு பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகியோர்போட்டியிடுகின்றனர்.
ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம், இந்த தேர்தலில் பங்களிக்கப் போவது இல்லை என தெரிவித்துள்ளது. இதே போல பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியும் தேர்தலைப் புறக்கணித்துள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவு இன்று மாலையே தெரிய வரும்.