எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக திமுக மனு… உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆர்) எதிராக திமுக தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 11) நடைபெற உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு(எஸ்ஐஆர்) இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிஹார், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த நடவடிக்கையால் பல லட்சம் வாக்காளர்களின் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளை முடக்க தேர்தல் ஆணையமும், பாஜகவும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் பிஹாரில் 65 லட்சம் பேர் வாக்குரிமையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், “எஸ்ஐஆர். நடைமுறைப்படுத்த உகந்த காலம் இதுவல்ல. மேலும் தேர்தல் ஆணையத்துக்கு இந்த நடைமுறையை செயல்படுத்துவதற்கு அதிகாரம் இல்லை. அரசிலமைப்புச் சட்டம் தந்த அதிகாரங்களை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுவதாவும்; தகுதி உள்ளவர்கள் நீக்கப்படுவதற்கும், தகுதியற்றோர் சேர்க்கப்படுவதற்கும் ஏதுவான வகையில் இந்த நடைமுறை அமைந்துள்ளதாகவும்; இந்த எஸ்ஐஆர் நடவடிக்கையை நடைமுறைபடுத்தினால், லட்சக்கணக்கான தமிழ்நாடு வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்படும்” என்பது உள்ளிட்ட காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

டெல்லி கார் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்க வேண்டாமா?- திருமாவளவன் கேள்வி!

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே பொறுப்பேற்க வேண்டும் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

டெல்லியில் கார் குண்டு வெடித்து 10 பேர் பலி- அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளே காரணம் என்று தெரிய வந்துள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே நேற்று இரவு 6.50 மணியளவில் காரில் குண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *