
சூடானில் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் விடுதலை இயக்கம், ராணுவத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். வடக்கு டார்பூரி நடந்த வன்முறையில் இருந்து தப்பித்த குடும்பங்கள் உணவு மற்றும் மருந்து கிடைக்காமல் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், மர்ரா மலையில் அவர்கள் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதியில் இருந்து அங்கு சில நாட்களாக இடைவிடாத மழை பெய்து வந்தது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரம் பேரும் உயிரிழந்தனர். இந்த பேரழிவில் இருந்து ஒருவர் உயிர் தப்பியதாக சூடான் விடுதலை இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உடல்களை மீட்கவும், மனிதாபிமான உதவிகளை வழங்கவும் அவசர உதவிக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகளாவிய நிவாரண நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.