விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை !

தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி பள்ளிகளுக்கு இன்று பிற்பகல் 1 மணி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பிரதிஷ்டை செய்யப்பட்ட 312 விநாயகர் சிலைகள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 4 கட்டங்களாக நீர் நிலைகளில் கரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தென்காசி, செங்கோட்டை, பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் நேற்று கரைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 85 விநாயகர் சிலைகளானது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் இன்று கரைக்கப்பட உள்ளது. இதனிடையே புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து வசதிகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் .29) பிற்பகல் 1 மணி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறும் மாதத்தேர்வுகளை மற்றொரு நாளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts

மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து வெடிக்கும்- கிலி ஏற்படுத்தியவர் கைது

மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை பயன்படுத்தி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தில் பிஹாரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 34 வாகனங்களில் வரும் 14 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள்…

டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் – ஆசிரியர்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆசிரியராக பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மத்திய மாநில அரசுகளால் ஆண்டு தோறும் டெட் ( Teachers Eligibility Test) எனப்படும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *