உ.பியில் அடுத்த அட்ராசிட்டி- போலி போலீஸ் ஸ்டேஷன் நடத்திய 6 பேர் கைது
உத்தரப்பிரதேசத்தில் போலியாக சர்வதேச போலீஸ் நிலையம் அமைத்து பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகவும், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாகவும் ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரை…
ஷாக்…. பிரபல மருத்துவமனையில் நர்ஸ் மர்ம சாவு!
பிரபல தனியார் மருத்துவமனையின் குளியலறையில் நர்ஸ் இறந்த நிலையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரின் சந்திரசேகர் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி ரவுத் என்ற…
சாத்தூர் அருகே பயங்கரம்- பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி
சாத்தூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பொன்னுபாண்டியன் . இவருக்குச் சொந்தமான வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக…
கச்சத்தீவு அருகே 8 மீனவர்கள் கைது- இலங்கை அட்டூழியம் தொடர்கிறது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகியுள்ளது. அத்துடன் மீனவர்களின்…
தமிழகத்தை உலுக்கிய வழக்கில் பரபரப்பு- 17 பேர் மீதான குண்டாஸ் ரத்து
தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி…
நெல்லையில் அவதூறு பேச்சு- ஷியாம் கிருஷ்ணசாமி மீது வழக்கு
நெல்லை கவின் கொலையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன்…
அடுத்தடுத்து பரபரப்பு…. டாக்டர் ராமதாஸின் போன் ஹேக் செய்யப்பட்டதாக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்
தைலாபுரம் இல்லத்தில் உள்ள தொலைபேசி,வைஃபை மற்றும் சிசிடிவி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக டிஎஸ்பி அலுவலகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புகார் செய்துள்ளார். தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாமகவில் டாக்டர் ராமதாஸ்க்கும்,…
குற்றங்கள் அதிகரிப்பு- தமிழகத்தில் 280 காவல் நிலையங்களைத் தரம் உயர்த்த அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்கள் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 1,366 தாலுகா காவல் நிலையங்களில்…
அதிர்ச்சி… நாமக்கல்லில் கடன் தொல்லையால் 3 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை
வீடு கட்ட வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தனது மூன்று மகள்களை வெட்டிக்கொலை செய்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தாஜ்(36). இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும்,…
ஓடும் ரயில்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு- பிடிபட்ட வாலிபர் அதிர்ச்சி தகவல்
இறந்து போன தனது சகோதரனின் ஆன்மாவை அமைதிப்படுத்த ரயில்களில் பெட்ரோல் குண்டுகளை வீசிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்லி- மொராதாபாத் ரயில் பாதையில் ஓடும் எக்ஸ் ரயில்களில் பெட்ரோல்…