போலி சஷ்டி யாசகசாலை தகடுகள் விற்பனை- திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் எச்சரிக்கை

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் யாக சாலை தடுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,”…

‘மொந்தா’ புயல் அச்சுறுத்தல்…9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மொந்தா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு பகுதி சென்னைக்கு தென்கிழக்கே…

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் சந்திக்கிறார் விஜய்!

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய், நாளை மறுநாள்(அக்டோபர் 27) மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் உள்ள வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.…

நாடே சோகம்… தாய்லாந்தின் ராஜமாதா காலமானார்

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் காலமானார். அவருக்கு வயது 93. தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் காலமானார்.  ராஜமாதா சிரிகிட், தாய்லாந்து நேரப்படி நேற்று இரவு 9.21 மணிக்கு பாங்காக்கில் உள்ள சுலாலொங்கோர்ன் மருத்துவமனையில் இயற்கை எய்தியதாக…

துக்க வீட்டில் விருந்து சாப்பிட்ட 5 பேர் உயிரிழப்பு

இறுதிச்சடங்கிற்கு பின் நடைபெற்ற விருந்தில் உணவு சாப்பிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தின் உள்ள துங்கா கிராமத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த இறப்பிற்கு கிராமத்தினர் சென்றிருந்தனர். இறுதிச்சடங்கு நடைபெற்ற பிறகு இறந்தவர் வீட்டில்…

மத போதகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்- 8 போலீஸார் சஸ்பெண்ட்

மதபோதகர்களை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ வைரலான நிலையில் எஸ்.ஐ உள்பட 8 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தின் ஜூதானா பகுதியில் கிறிஸ்தவ மதபோதகர்களை உள்ளூர் மக்கள் சிலர் பிரசங்கம் செய்ய நேற்று  அழைத்துச் சென்றிருந்தனர்.…

விஷ சாக்லெட் கொடுத்து என்னைக் கொல்ல பார்த்தார்கள்- ஈக்வடார் அதிபர் பகீர் புகார்!

விஷ சாக்லெட் கொடுத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளதாக ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபராக இருப்பவர் டேனியல் நோபோவா(37). இவர் தலைமையில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த…

ஆவணங்கள் சிக்கின…. கனிம வளத்துறை உதவி இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநராக இருப்பவர்…

போலீஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு… 36 வழக்குகளில் தேடப்பட்டவர் என்கவுன்டர்

கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பது என கதிகலங்க வைத்த பயங்கர குற்றவாளியான ஃபைசலை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம். ஷாம்லி மாவட்டத்தில் போகி மஜ்ரா கிராமத்திற்கு அருகே சஞ்சீவ் ஜீவாவின் கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு நேற்று இரவு தகவல்…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த…