போலீஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு… 36 வழக்குகளில் தேடப்பட்டவர் என்கவுன்டர்

கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பது என கதிகலங்க வைத்த பயங்கர குற்றவாளியான ஃபைசலை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம். ஷாம்லி மாவட்டத்தில் போகி மஜ்ரா கிராமத்திற்கு அருகே சஞ்சீவ் ஜீவாவின் கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு நடவடிக்கைக்குழு (எஸ்சிஓ) போலீஸாரும், ஜின்ஜானா காவல் நிலைய போலீஸாரும் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த இருவர் போலீஸாரை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில், தீபக் நிர்வான் என்ற போலீஸ்காரர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் போலீஸார் சுட்டத்தில் ஒருவரின் நெஞ்சில் தோட்டா தாக்கியது. இதனால் மற்றொருவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். உடனடியாக குண்டு காயம் பாய்ந்த ஃபைசல் என்பவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குண்டு காயமடைந்த போலீஸ்காரர் தீபக் நிர்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீஸாரின் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ஃபைசல், முசாபர்நகரின் கலப்பர் பகுதியைச் சேர்ந்தவர். பிரபல கொள்ளைக்கும்பல் சஞ்சீவ் ஜீவாவின் கும்பலை சேர்ந்தவர். அந்த கும்பலில் துப்பாக்கிச்சுடுவதில் ஃபைசல் வல்லவராவார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட், முசாபர்நகர், ஷாம்லி, சஹாரன்பூர் ஆகிய இடங்களில் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டவர். இவரை கைது செய்வோருக்கு 1 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என காவல்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல், குண்டர் சட்டம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தல் என 36 வழக்குகளில் தொடர்புடைய ஃபைசலை நீண்ட காலமாக போலீஸார் தேடி வந்துள்ளனர். அவர் ஊன்-சௌசானா சாலையில் மற்றொருவருடன் இருப்பதை அறிந்து போலீஸார், அந்த இடத்தில் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டதில் அவர் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், ஒன்பது தோட்டாக்கள், ஐந்து வெடிகுண்டுகள், இரண்டு பைக்குகள், செல்போன்கள், ரொக்க பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஃ பைசலும், அவரது கூட்டாளியும் ஒரு நாளைக்கு முன்பு பர்னவியை சேர்ந்த ஜீத்ராம் மற்றும் அவரது மனைவியை வழிமறித்து பைக், செல்போன், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். அந்த பைக்கையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஃபைசலின் கூட்டாளியான ஷாருக் பதான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, எஸ்டிஎஃப் குழுவுடன் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து மேற்கு உத்தரப் பிரதேசத்தில் கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சட்டவிரோத மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஃபைசலின் என்கவுன்டர் சஞ்சீவ் ஜீவா கும்பலின் அடித்தளத்தை ஆட்டம் காணச்செய்துள்ளதாக போலீஸார் கூறினர். ஏற்கெனவே 1 லட்ச ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்ட நஃபீஸ் என்பவரை போலீஸார் என்கவுன்டர் செய்திருந்தனர். ஒரே வாரத்தில் அடுத்ததாக பைசலையும் அவர்கள் என்கவுன்டர் செய்துள்ளது குற்றவியல் உலகில் பீதியை கிளப்பியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *