வன்முறை காடாக மாறிய நேபாளத்தில் அமைதி திரும்பட்டும்- பிரதமர் மோடி வலியுறுத்தல்!

நேபாளத்தில் அமைதி திரும்பவுது முக்கியம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்ய தவறிய இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை…

சீனா எல்லை வழியாக இந்தியாவிற்கு ரூ.800 கோடி தங்கம் கடத்தல்- அதிர வைத்த அமலாக்கத்துறை

சீனாவிலிருந்து திபெத் வழியாக டெல்லிக்கு ரூ.800 கோடி மதிப்புள்ள 1,064 கிலோ தங்கம் கடத்தி வந்த மூன்று பேரை இந்தோ- திபெத் எல்லை காவல்துறை கைது செய்துள்ளது. லடாக்-சீன எல்லையில் ரூ.80 கோடி மதிப்புள்ள தங்கத்தை எடுத்துச் சென்ற 2 பேரை…

துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – கருப்பு ஆடுகளான எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் அவருக்கு வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை திடீரென…

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்- செங்கலால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!

மது குடிக்கப் பணம் தர மறுத்த தந்தையின் தலையில் செங்கலை கொண்டு தாக்கி 19 வயது வாலிபன் கொலை செய்த சம்பவம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சர்பாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதம்(43). இவரது மகன் உதய்(19). இவருக்கும்,…

அதிர்ச்சி… டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டிடம்

டெல்லியின் சப்ஜி மண்டியில் இன்று அதிகாலை திடீரென நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டெல்லியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததாக தீயணைப்புச் சேவைக்கு இன்று அதிகாலை 3.05…

இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தலில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினைச் செலுத்தினார். இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீன் தன்கர்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்த அந்த பதவிக்கு இன்று தேர்தல்…

பகீர்… குளிக்கும் போது மாமனார் ரகசியமாக வீடியோ எடுப்பதாக பாஜக எம்.பியின் சகோதரி புகார்!

பாஜக எம்.பியின் சகோதரி குளிக்கும் போது ரகசியமாக வீடியோ எடுத்ததுடன் அவர் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், பரூகாபாத் எம்.பியாக இருப்பவர் முகேஷ் ராஜ்புத். பாஜகவைச் சேர்ந்த இவர் சகோதரி தாக்கப்படும்…

சமோசா வாங்காத கணவனுக்கு அடி உதை- ஊர் பஞ்சாயத்தாக மாறிய சம்பவம்!

ஆசையாக வாங்கி வரச்சொன்ன சமோசாவை கணவன் வாங்கி வராததால் ஏற்பட்ட தகராறில் நடைபெற்ற அடிதடி சம்பவம்  இன்று இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபித் மாவட்டத்தில் உள்ள புரான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவம்(26). இவரது மனைவி சங்கீதா(23). இவருக்கு…

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,700 கோடி இழப்பு- எஸ்பிஐ அறிவிப்பு

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,700 கோடி இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 5, 12,…

பயணிகளுக்கு அன்பான அறிவிப்பு- வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் அதிகரிப்பு!

மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் செப்.11-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் வருகிற செப்.11-ம்தேதி…