இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகள், அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதைத் தொடரந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார் சோதனையில் அது புரளி எனத் தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்மநபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் பின்னி சாலையில் உள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வீட்டிற்கும் 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


