
அமெரிக்காவில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நின்ற விமானத்தில் மோதி பயணிகள் விமானம் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஹெலினாவிலிருந்து வடமேற்கே சுமார் 200 மைல் தொலைவில் வடமேற்கே மொன்டானாவில் கலிஸ்பெல் அமைந்துள்ளது. அந்த விமான நிலையத்தில் சிறிய வகை பயணிகள் விமானம் தரையிறங்கியது. அப்போது திடீரென ஓடுபாதையில் இருந்த விமானத்தின் மீது அந்த சிறிய வகை விமானம் மோதியதால் தீப்பற்றிக் கொண்டது. இதையடுத்து விரைந்து வந்த கலிஸ்பெல் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
கலிஸ்பெல் காவல் துறையின் அறிக்கையின்படி, விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதன் விளைவாக ஓடுபாதையில் விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சேர்ந்த விமானத்தில் இருந்த நான்கு பயணிகளும் சிறிய காயங்களை மட்டுமே சந்தித்ததாகவும், சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றதாகவும் கலிஸ்பெல் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து எஃப்ஏஏ மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகின்றன.