ஷாக்… விமானம் மீது விமானம் மோதி பயங்கர விபத்து!

அமெரிக்காவில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நின்ற விமானத்தில் மோதி பயணிகள் விமானம் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஹெலினாவிலிருந்து வடமேற்கே சுமார் 200 மைல் தொலைவில் வடமேற்கே மொன்டானாவில் கலிஸ்பெல் அமைந்துள்ளது. அந்த விமான நிலையத்தில் சிறிய வகை பயணிகள் விமானம் தரையிறங்கியது. அப்போது திடீரென ஓடுபாதையில் இருந்த விமானத்தின் மீது அந்த சிறிய வகை விமானம் மோதியதால் தீப்பற்றிக் கொண்டது. இதையடுத்து விரைந்து வந்த கலிஸ்பெல் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

கலிஸ்பெல் காவல் துறையின் அறிக்கையின்படி, விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதன் விளைவாக ஓடுபாதையில் விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சேர்ந்த விமானத்தில் இருந்த நான்கு பயணிகளும் சிறிய காயங்களை மட்டுமே சந்தித்ததாகவும், சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றதாகவும் கலிஸ்பெல் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து எஃப்ஏஏ மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகின்றன.

Related Posts

துருக்கியை குலுக்கிய நிலநடுக்கம்: சடசடவென சரிந்த கட்டிடங்கள்!

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இஸ்தான்புல்: வடமேற்கு துருக்கியில் சிந்திர்கி என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மீட்புக் குழுக்களும் உடனடியாக…

பரபரப்பு… முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டு சிறை- ரூ.15 கோடி அபராதம்

விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டியதாக சாட் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், 15 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா நாடான சாட்டின் முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா(41). இவர் தற்போது எதிர்கட்சியான லெஸ் டிரான்ஸ்பார்மேட்டர்ஸ் கட்சியின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *