
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்க்டேஷ் உத்தரவிட்டுள்ளார்.
பாமக பொதுக்குழுக் கூட்டத்தை மாமல்லபுரத்தில் நாளை பாமக தலைவர் அன்புமணி கூட்டியுள்ளார். இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முரளி சங்கர் என்பவர் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்தத நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ஆகியோரிடம் தனியாக பேச வேண்டியுள்ளதால், இருவரையும் தன்னுடைய அறைக்கு நேரில் வர முடியுமா என இரு தரப்பு வழக்கறிஞரிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதை பாமக தலைவர் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டார். ஆனால், டாக்டர் ராமதாஸ் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து, மாலை 5:30 மணிக்கு தன் அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது, கட்சியினர், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு அனுமதியில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.