இணை அரசாங்கம் நடத்தும் ஐஏஎஸ் அதிகாரிகள்: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என்ற பெயரில் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஏற்கெனவே வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கியவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வீடு பெற தகுதியில்லை என்று அரசு ஒரு திருத்த அரசாணையை பிறப்பித்தது. இதனை எதிர்த்து கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, விசாரணையை பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளி வைத்தார்.

அப்போது கவிஞர் வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ஏற்கெனவே ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில், இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின் தேதியிட்டு அமல்படுத்துவதாக அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குத் தொடர்பாக உயர்நீதிமனற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். இது துரதிஷ்டவசமானது. எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம், இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது. கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார். ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *