
வீட்டில் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவராக தமிழகத்தில் செயல்பட்டவர் இல.கணேசன். அவருக்கு வயது 80 ஆகிறது. தேசிய தலைவர், தேசிய துணைத்தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்ட அவர் தற்போது, நாகலாந்து மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி வருகிறார். இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள வீட்டில் இல.கணேசன் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர்.