தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆக.10-ம் தேதி சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கெனவே தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் ஆக.10-ம் தேதி நடைபெறுகிறது
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் , மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாநிலத் தலைவரின் தேர்தல் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள், தேசிய தலைவர்களின் வருகை மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.


