விருதுக்காக ஒரு குறும்படம்- மதுரையில் பூஜையுடன் இனிதே தொடங்கியது!

விருதை இலக்காக வைத்து மதுரையில் குறும்பட பூஜை தொடக்கவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பார்க் முருகன் கோயிலில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையில் குறும்பட பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் மீசை மனோகரன், அப்பா பாலாஜி, மீசை அழகப்பன், நடிகை மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த குறும்படம் எடுக்கும் வி 3 கிரியேஷன்ஸை தொடங்கி வைத்து அகஸ்தியர் ஹெர்பல் நாகலிங்கம் வாழ்த்து கூறினார்.

இந்த விழாவில் எழுத்தாளர் சுந்தரபாண்டி, தமிழ் திரைக்கலைஞர்கள் நலச்சங்க தலைவர் சுப்புராஜ், அறிமுக நடிகர் செளந்தரபாண்டி, நடிகர் வைத்தியலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எழுத்தாளர் விவேக் ராஜ், எழுத்தாளர் விமல், கல்லூரி மாணவி லாவண்யா, நடிகை ரிஷிதா, குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள், தேநீர் வழங்கப்பட்டது.

Related Posts

பரபரப்பு… தவெக தலைவர் விஜய் வீட்டுக்குள் புகுந்த மர்மநபரால் ஆடிப்போன பாதுகாவலர்கள்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்குள் மர்மநபர் திடீரென புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் பங்களா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ளது. இந்த…

நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் அறிமுகமானவர் ரோபோ சங்கர். நடிகர் விஜய்யுடன் புலி,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *