தருமபுரி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து, தலைமறைவான அரசுப்பள்ளி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
தருமபுரி நகர்பகுதிக்கு அருகேயுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் குமரேசன் என்பவர் ஆங்கில அரசிரியராக பணியாற்றி வந்தார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
இவர் 7ம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், அரசு பள்ளி மாணவிகளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, சில மாணவிகளிடம் ஆசிரியர் குமரேசன் தவறாக நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போக்சோ வழக்குப்பதிவு
இதனை தொடர்ந்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறைமினர் ஆசிரியர் குமரேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான ஆசிரியர் குமரேசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


