காட்டுத் தீயாய் பரவும் ‘பராசக்தி’ படத்தின் கதை:வெளியான சுவாரஸ்ய தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’. இப்படத்தில் ரவிமோகன், அதர்வா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படம் 2026 ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. விரைவில் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் கதை இதுதான் என கூறி தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், ‘முன்னாள் மெட்ராஸ் மாநிலத்தில் நடைபெற்ற குடிமக்கள் மறுப்பு போராட்ட காலப்பின்னணியில் அமைந்த இந்தக் கதையில், கிளர்ச்சியாளர்களை தேடி ஒழிக்க வேண்டிய கடமையுடன் ஒரு கொடூரமும் புத்திசாலித்தனமும் கொண்ட அதிகாரி வருகிறார். செழியன் மற்றும் அவரது சகோதரர் சின்னதுரை இருவரும் முற்றிலும் வேறுபட்ட குணநலன்களை கொண்டவர்கள். ஒருவர் கடினமாக உழைக்கும் தீயணைப்பாளர், மற்றொருவர் ஒரு புரட்சியாளர். இவர்களுக்கிடையில் உயிர் ஆபத்தான பூனை, எலி விளையாட்டு போல ஒரு துரத்தல் தொடங்குகிறது.

தனது மக்களைப் பாதுகாக்க, அமைதியான வாழ்வை விட்டு விலக செழியன் கட்டாயப்படுத்தப்படுகிறார். இறுதியில் பாசமா, நீதியா என்ற சூழலில் நாயகன் எடுக்கும் முடிவு தான் ‘பராசக்தி’ படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஆனால், இதுதான் உண்மையான கதையா என படக்குழு இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

Related Posts

கும்பகோணத்தில் டிச.20-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

கும்பகோணம் மாநகராட்சியில் டிசம்பர் 20-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தஞ்சாவூர் கிழக்கு…

24 மீட்டர் சுதந்திர தேவி சிலையை தூக்கி வீசிய சூறாவளி காற்று!

பிரேசிலில் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை சூறாவளி காற்றால் நொறுங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் சாவோ பாலோ மாகாணத்தில், 2  நாட்களுக்கு முன் வெப்ப மண்டல புயல் உருவானது. அந்த புயலால் பலத்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *