இளையராஜாவுக்கு அந்த உரிமை உண்டு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதைத் தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் இளையராஜா இசையமைத்த ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ இதோ’ ஆகிய 3 பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன, ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை மைதிலி மூவீஸ் மேக்கர் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் தனது அனுமதி பெறாமல் பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் தியாகராஜன் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை விலக்கக்கோரியும், இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தக்கோரியும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘குட் பேட் அக்லி’ படத்தில் இடம்பெற்ற ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ இதோ’ ஆகிய 3 பழைய பாடல்களை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,”அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதை தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உண்டு. இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை” என்று நீதிபதி தெரிவித்தார்.இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம் பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Posts

‘இவ்வளவு குனிந்து கும்பிடும்’:இபிஎஸ்சை விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் எதற்கு என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 17) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,” பச்சைத்துண்டு…

மகாத்மா காந்தியை திட்டமிட்டு தீர்த்து கட்டிய கூட்டம்: வைகோ ஆவேசம்

மகாத்மா காந்தியை திட்டமிட்டு தீர்த்துக் கட்டிய கூட்டம் பின்னணியில் இருந்து வழி நடத்துகிற பாஜக ஆட்சியில் இவையெல்லாம் வியப்புக்குரியதல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (டிச.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் , திமுக,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *