பாடகி சின்மயி ஒன்னு சொல்ல, அதற்கு இயக்குநர மோகன்.ஜி விளக்கம் கேட்க, இதற்கு இடையில் இயக்குநர் பேரரசு “பணத்தை திருப்பி கொடுங்கள் சின்மயி இயக்குநர் மோகன்.ஜி, வேறொரு பாடகியை வைத்து அந்த பாடலை பதிவு செய்து கொள்வார்” என்று சொல்ல தற்போது “திரௌபதி-2” படத்தின் பாடல் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

சின்மயி பாடிய பாடல்
“திரௌபதி’ படத்தின் 2-வது பாகத்தை மோகன். ஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் ரக்சனா இந்துசூடன் ‘திரௌபதி தேவி’யாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன், திரௌபதி-2 படத்தில் இடம்பெற்ற “எம்கோனே!” என்ற பாடல் வெளியானது. இப்பாடலை சின்மயி பாடியுள்ளார்.

“முன்பே தெரிந்திருந்தால்..”
திரௌபதி-2 படத்தில் பாடியதற்கு பாடகி சின்மயிக்கு விமர்சனம் எழுந்த்தாக தெரிகிறது. இந்நிலையில் பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில், “எம்கோனே! பாடல் பாடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜிப்ரானை 18 வருடங்களாக எனக்கு தெரியும். அவரது அலுவலகத்தில் இருந்து இந்த பாடலை பாட அழைத்தபோது, வழக்கம் போல சென்று பாடினேன்.

அப்போது ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாமே புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் பாடியிருக்க மாட்டேன். எனக்கும் அந்த கொள்கைகளுக்கும் நிறைய முரண் உள்ளது. இதுதான் முழு உண்மை” என்று பதிவிட்டுள்ளார். இதுபெரும் சர்ச்சையானது.

இந்த பாடகி சின்மயி கூறிய கருத்திற்கு, “திரௌபதி-2” படத்தின் இயக்குநரான மோகன்.ஜி தனது தரப்பிலிருந்து விளக்கத்தை தெரிவித்து, கேள்வியும் எழுப்பி உள்ளார்.
மோகன்.ஜி விளக்கம்..!
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இயக்குநர், மோகன்.ஜி ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே படம் எடுப்பார். அவர் பெண்களுக்கு எதிராக படம் எடுப்பவர் என்று சொல்லி, அவருடைய படத்தில் எப்படி நீங்கள் பாடலாம், உங்களுடைய புரட்சி எல்லாம் எங்கே போனது என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். அப்போதே இதற்கு சின்மயி மேடம் பதிலளிப்பார் என தோன்றியது என்றார்.

மேலும், “நான் நினைத்த மாதிரியே இப்பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்த சித்தாந்ததில் படம் எடுப்பது தெரிந்திருந்தால் பாடியிருக்கவே மாட்டேன் என்று ட்வீட் செய்தார் சின்மயி மேடம்.

மோகன்.ஜி கேள்வி..?
இது தொடர்பாக என்னிடமோ, இசையமைப்பாளரிடமோ எந்தவொரு விளக்கமும் கேட்கவில்லை. அது ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது என்று பேசியுள்ளார்.
“சின்மயி மேடம் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை என்றால், அவருடைய ட்வீட்டையாவது நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்தை உங்களுடைய விஷயம் வியாபாரத்தில் பாதிக்க கூடாது என நினைக்கிறேன். விரைவில் சின்மயி மேடத்திடம் இருந்து நல்ல பதில் எதிர்பார்க்கிறேன்” என்று தான் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார் மோகன் ஜி.

பணமா முக்கியம்..?
இந்த விவகாரம் குறித்து பேசிய, இயக்குநர் பேரரசு, “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே! பாடுவதற்காக தாங்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டு உங்கள் குரலை நீக்கிவிடச் சொல்லலாம்! கொள்கையை விட பணமா முக்கியம்? இயக்குனர் திரு. மோகன் ஜி அவர்கள் வேறு ஒரு குரலை பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது” என்று சின்மயின் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு பாடலுக்கு வெடித்த சர்ச்சை
இதுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பொதுவாக இயக்குநர் மோகன்.ஜி படம் வெளியாகும் நேரத்தில் தான் சர்ச்சைகள் வெடிக்கும். ஆனால் இந்த படத்தின் முதல் பாடல் வெளியான போதே சர்ச்சையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


