திருவண்ணாமலையில் இன்று கனமழை எச்சரிக்கை:மகாதீபம் ஏற்றப்படுமா?

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்ற உள்ள நிலையில் இன்று (டிசம்பர் 3) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தெற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையக்கூடும்ட என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,” காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விழுப்புரத்தில் நிலை கொண்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட வட கடலோர, வட தமிழக உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழக மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், காவிரி டெல்டாவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். மகாதீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலையில் இன்று பிற்பகல் வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மாலை தீபம் ஏற்றும் நேரத்தில் மழையின் தீவிரம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

  • Related Posts

    அதிவேகமாக வந்த ரயில் மோதி 8 யானைகள் பலி: மூடுபனி காரணமா?

    அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன. மேலும் ஒரு குட்டி யானை படுகாயமடைந்தது. அசாம் மாநிலம், ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை சாய்ராங்-புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், சாங்ஜுராய் கிராமத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது யானைக்கூட்டம்…

    ‘தம்பி கட்சி இப்பதான் ஆரம்பிச்சிருக்கு’: விஜய்யை உடைசல் கொடுத்த சீமான்!

    ‘தம்பி கட்சி இப்பதான் ஆரம்பிச்சிருக்கு, அதை தட்டிக்கொடுத்து தான் வளர்க்கணும்’ என்று தவெக தலைவர் விஜய்யை சீமான் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று(டிசம்பர் 20) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *