பிஹாரில் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது போல், தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தெரிகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தென்காசியில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் மக்களின் ஆதரவுடன் ஆட்சி அமையும். தீவிர வாக்காளர் பட்டியல் சேர்ப்பு (எஸ்ஐஆர்) விவகாரத்தை வைத்து திமுகவினர் மக்களை குழப்புகின்றனர். பிஹாரில் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது போல, தமிழ்நாட்டில் சுமார் 75 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியில் இருந்து நீக்கப்படும் என்று தெரிகிறது.
இதில் 2002-ம் ஆண்டுக்குப பின்னர் இறந்தவர்களின் வாக்குகளே இருக்கும். உதாரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நின்று வெற்றி பெற்ற கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 10 ஆயிரம் வாக்குகள் இறந்தவர்களின் பெயரில் உள்ளன. அவற்றை நீக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.


