பிரபல டிஜிட்டல் பத்திரிகையாளரும், தற்போது சிறையிலுள்ள சவுக்கு சங்கரின் நண்பருமான பெலிக்ஸ் ஜெரால்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.
ரெட் பிக்ஸ் என்னும் யூடியூப் சேனலில் அரசியல் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார், பெலிக்ஸ் ஜெரால்டு. பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கரை அவர் அடிக்கடி நேர்காணல் எடுத்து பிரபலமானார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் குறித்து தவறாக பேசியதாக பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் கைது செய்யபட்டு சிறை சென்றனர்.

தவெக-வில் இணைந்த பெலிக்ஸ்
விடுதலை ஆன பிறகு, பெலிக்ஸ் ஜெரால்டு, தொடர்ந்து யூடிப் சேனல்களில் அரசியல் தொடர்பான விமர்சனங்களை பதிவு செய்து வந்தார். இந்நிலையில், இன்று பெலிக்ஸ் ஜெரால்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

சக தோழர் விஜய்
இதுகுறித்து பேசிய பெலிக்ஸ், “51 வயதில், கடந்த 12 வருடங்களாக நான் உருவாக்கி வந்த தொழிலில் இருந்து ஒரு படி பின்வாங்கி, தலைமுறை மாற்றத்தை உருவாக்கும் ஒரு இயக்கத்தில் சேர முடிவு செய்துள்ளேன். எனது சக தோழர் விஜய், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.


