சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.10.50 வரை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கேற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்த வகையில் டிசம்பர் மாதத்தின் துவக்க நாளான இன்று (டிச.1) சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.10.50 குறைக்கப்பட்டுள்ளது. இதன் படி 1,750 ரூபாய்க்கு விற்று வந்த வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை தற்போது 1,739. 50ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரூ.868. 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிகப் பயன்பாடு சிலிண்டரை பொறுத்தமட்டில் பிற மெட்ரோ நகரங்களான டெல்லி,மும்பை கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் இன்று விலை குறைக்கப்பட்டுள்ளது.


