சிவகங்கை கோர விபத்தில் 11 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார. அத்துடன் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணமும் அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகே காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இதுவரை 11பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் பெற்று வருகின்றனர். பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்ளின் குடும்பத்தினருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆறுதலும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, சிவகங்கை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ” சிவகங்கையில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயரத்தில் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதி மூலம் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

Related Posts

ஒரு மாதத்திற்கு இலவசமாக பீர் வேண்டுமா?…அதற்கு இதைச் செய்ய வேண்டும்!

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப உதவுபவர்களுக்கு ஒரு மாதம் இலவசமாக பீர் வழங்கப்படும் என்று ஒரு மதுபானக்கடை அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இடஹோ மாகாணத்தில் ஈகிள் நகரில் ஓல்டு ஸ்டேட் சலூன் என்ற மதுபானக்கடை உள்ளது. இந்த…

அரசு பஸ் மோதி அப்பளம் போல நொறுங்கிய வேன்: 2 பெண்கள் பலி

செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து இன்று(டிச.1) சென்று கொண்டிருந்தது. அப்போது கூவத்தூரில் இருந்து வேலைக்குச்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *