TNEA | பொறியியல் கலந்தாய்வு: மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வெளியீடு

இளநிலைப் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 374 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 946 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தனர். அதன் அடிப்படையில், விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது.

  • Related Posts

    நாளை காவலர்களுக்கான தேர்வு : தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

    தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. 3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத…

    பட்டப்படிப்புக்கான இடஒதுக்கீட்டில் ஆபத்து! – கல்வியை தனியார்மயமாக்கும் புதிய சட்டம்- திமுக அரசு

    தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் ஆளும் திமுக அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்துள்ளது. அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு அதாவது, 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *