சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் தனியாக பேருந்து நிலையத்தில் நின்ற பெண்கள் முன்பு அருவருக்கத்தக்க வகையில் ஆபாச செயலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. கோயம்புத்தூரில் விமான நிலையம் அருகில் இளம்பெண், மதுபோதையில் சிலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் இராமேஸ்வரத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனியாக நின்ற பெண்களிடம்..
இந்நிலையில், சென்னை வேளச்சேரி பேருந்து நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் பேருந்துக்காக காத்திருந்த பெண்களிடம் முன்பு, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அருவருக்கத்தக்க பாலியல் ரீதியாக ஆபாச செய்கையில் ஈடுபட்டார். அந்நபர் ஆபாச செய்கையில் ஈடுபடும் போதும், அங்கிருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

வீடியோ வைரல் !
இருப்பினும் தொடர்ந்து அந்நபர் மீண்டும் அச்செயலில் ஈடுபட, சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வீடிய வைரலானதை தொடர்ந்து, அந்த நபரை போலீசார் தேடி வந்தனர்.

வடமாநிலத்தவர் கைது
இதையடுத்து, வேளச்சேரி பேருந்து நிலையத்தில், பெண்களிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைதான நபர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவர் பெயர் மகேஷ் குமார். சென்னையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை போலீசாருக்கு பாராட்டுகள்:
சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவிட்ட உடன், விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த சென்னை மாநகர காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



