நடிகை ஷ்ரேயா செம கவர்ச்சியில் ஆடிய குத்தாட்டம் – ‘கனகா’வுக்கு வரவேற்பு!

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் சிரிஷ் நடிப்பில் யுவன் இசையில் உருவாகியுள்ள ‘NON VIOLENCE’ (நான் வைலன்ஸ்) படத்தின் முதல் பாடல் ‘கனகா’ லிரிக் வீடியோ வெளியாகி 3 நாட்களில் 4.8 மில்லியன் பார்வைகளை கடந்தது.

கவர்ச்சி குத்தாட்டம்:-

நடிகை ஷ்ரேயா இப்பாடலில் கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்ட நடிகை ஸ்ரேயா, இந்த படத்தில் ஒரு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

ஐட்டம் சாங் ஆடும் நடிகைகள்

பொதுவாக தற்போது வெளியாகும் தமிழ், தெலுங்கு படங்களில் ஒரு பாடலாவது கவர்ச்சி குத்தாட்ட பாடல் இடம்பெற்று விடுகிறது. அந்த பாடலுக்கு நடனமாடும் நடிகைகள் ஒரு பாடல் என்றாலும் அந்த பாடல் மூலம் மிகவும் பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த பாணியை நடிகை ஸ்ரேயா பின்பற்றியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

நான் வயலன்ஸ்

‘மெட்ரோ’ மற்றும் ‘கோடியில் ஒருவன்’ போன்ற படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “நான் வயலன்ஸ்”. இந்த படத்தில் பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன், மெட்ரோ சிரிஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 90-களில் நடக்கும் கதையான இது, மதுரை பின்னணியில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

கம்பேக் நடிகை ஸ்ரேயா

திருமணம் ஆனதில் இருந்து தமிழில் நடிப்பதை குறைத்துகொண்ட ஸ்ரேயா, இந்தாண்டு வெளியான நடிகர் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் பாடல் ஒன்றுக்கு சிறப்பு நடனம் ஆடி கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிறைய நடிகைகள் கம்பேக் கொடுப்பதற்கும்; சரிந்து போன மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவதற்கும் கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

Related Posts

அரசு பேருந்துகள் மோதி கோர விபத்து – பலி எண்ணிக்கை 11ஐ தாண்டும் என தகவல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். கோர விபத்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.…

மீண்டும் கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை மீனாட்சி சவுத்ரி – பாடல் செம வைரல்!

தெலுங்குவில் வெளியான “பீமாவரம் பல்மா” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், மீனாட்சி சவுத்ரி ஆடிய நடன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொங்கல் வெளியீடு! வரும் பொங்கல் பண்டிகை யொட்டி தெலுங்கு திரையுலகில் வெளியாக உள்ள “அனகனக ஓக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *