
கர்நாடகாவில் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் சித்தராமையா, இது மத்திய அரசின் கணக்கெடுப்பிலிருந்து வித்தியாசமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 2015ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் 162 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 2015இல் நடந்த கணக்கெடுப்பு காலாவதி ஆகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
புதிதாக கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளதாக கூறிய அவர், கணக்கெடுப்பு நடத்த 80 நாட்கள் வரை ஆகும் என நிபுணர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.