
ஆள் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கும் ஏடிஜிபி ஜெயராமை, பணியிடை நீக்கம் செய்தது, அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி ஆணையிட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஜெயராம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் மற்றும் மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆள் கடத்தல் வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத நிலையில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது தவறானது என்று அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.