
கடும் சர்ச்சை எழுந்த நிலையில் மகாராஷ்டிரா தொடக்கப் பள்ளிகளில் இந்தி மூன்றாவது கட்டாய மொழியில் இருந்து விருப்ப மொழியாக மாற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக மாற்ற முயற்சி நடந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்தி கட்டாய பாடம் என்ற அறிவிப்பை திருத்தியுள்ள மாநில கல்வி வாரியம், புதிய சுற்றறிக்கையை அளித்துள்ளது.
அதன்படி இந்தி இனி மகாராஷ்டிராவில் கட்டாயமான மூன்றாவது மொழியாக இருக்காது. மாணவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு இந்திய மொழி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.