முன்கூட்டியே ஓடிடியில் வெளியாகும் கமலின் ‘தக் லைஃப்’ – என்ன காரணம் தெரியுமா?

கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் முன் கூட்டியே ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.
38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் த்ரிஷா, சிம்பு, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்ர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் கடந்த ஜுன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. இதனால் பாக்ஸ் ஆஃபீஸில் சோபிக்கவில்லை.
இப்படத்தினை இந்தியில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியிட 8 வாரங்களுக்கு பின்னரே ஓடிடி வெளியீடு என்று முடிவு செய்து ஒப்பந்தம் போட்டது படக்குழு. இதனை மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்பிலும் உறுதிப்படுத்தினார் கமல். தற்போது படம் பெரும் தோல்வியால் இப்படத்தினை முன்னரே ஓடிடியில் வெளியிட ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
  • Related Posts

    ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ரஜினியின் ‘லால் சலாம்’ – எப்போது எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

    ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த திரைப்படத்தில் விக்ராந்த்,…

    ஓடிடி ட்ரெண்டிங்கில் முதலிடம்.. இந்த த்ரில்லர் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க

    ஓடிடி ட்ரெண்டிங்கில் த்ரில்லர் திரைப்படம் ஒன்று அதிக வியூஸ்களை குவித்து வருகிறது. இந்தப் படத்தை ஏராளமானோர் கண்டு ரசித்துள்ளனர். ஒவ்வொரு வார இறுதியிலும் சினிமாவைப் போன்று ஓடிடி தளத்திலும் விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் வெளியாகின்றன. டாக்குமென்டரி, வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை ரசிகர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கைக் கொடுக்கின்றன. தியேட்டர் ரிலீஸில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களை ஓடிடி தளங்களில் ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்கிறார்கள். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், Sony லைவ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய தளங்கள் ஓடிடி துறையில் முன்னணியில் உள்ளன.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *