உச்சக்கட்ட பாதுகாப்பில் கோவை- பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகை

பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (நவம்பர் 19) தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். இதற்காக அவர் நாளை மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு செல்கிறார். அங்கு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுவதுடன், சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இதைதொடர்ந்து அவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி மாலை 3.15 மணிக்கு கொடிசியாவில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

கோவைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவை விமான நிலையத்திலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்று முதல் நாளை இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts

அரசு பஸ் மோதி அப்பளம் போல நொறுங்கிய வேன்: 2 பெண்கள் பலி

செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து இன்று(டிச.1) சென்று கொண்டிருந்தது. அப்போது கூவத்தூரில் இருந்து வேலைக்குச்…

தகாத உறவு…மனைவியை வெட்டிக் கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த கணவர்!

மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்துடன் செல்ஃபி எடுத்து அதை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *