500 கிலோ மாம்பழம்… மாஸாக நின்ற மாருதி… நாமக்கல் நாயகனுக்கு பக்தர் செய்த செயல்…

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரத்தில் இரு கைகளைக் கூப்பி வணங்கியவாறு பிரம்மாண்ட ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நாள்தோறும், சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஆஞ்சநேயருக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும் மார்கழி மாதத்தில் வெண்ணெய் காப்பு, சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படும். மற்ற நாட்களில் தங்க கவசம், முத்தங்கி, வெற்றிலை மற்றும் புஷ்ப அலங்காரம் செய்து அபிஷேகம் செய்யப்படும்.
நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடத் தமிழகம் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது மாம்பழ சீசனை முன்னிட்டு ஆஞ்சநேயர் பக்தரான ரவிக்குமார் என்பவர் சார்பில் 500 கிலோ எடையில் நீல ரகத்தைச் சேர்ந்த சுமார் 1500 மாம்பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

  • Related Posts

    வருகிறது விநாயகர் சதுர்த்தி: 69 அடியில் தயாராகும் பிரம்மாண்ட சிலை

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத்தில் 69 அடியில் பிரம்மாண்ட விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் முக்கிய பகுதியான கைரதாபாத்தில் விநாயகர் சதுர்த்திக்காக சிலை வைத்து கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 71-ம் ஆண்டு…

    பவுர்ணமி கிரிவலம் போலாமா? – திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு

    பவுர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலை- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு படையெடுப்பார்கள். இந்த மாத பவுர்ணமி கிரிவலம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *