500 கிலோ மாம்பழம்… மாஸாக நின்ற மாருதி… நாமக்கல் நாயகனுக்கு பக்தர் செய்த செயல்…

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரத்தில் இரு கைகளைக் கூப்பி வணங்கியவாறு பிரம்மாண்ட ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நாள்தோறும், சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஆஞ்சநேயருக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும் மார்கழி மாதத்தில் வெண்ணெய் காப்பு, சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படும். மற்ற நாட்களில் தங்க கவசம், முத்தங்கி, வெற்றிலை மற்றும் புஷ்ப அலங்காரம் செய்து அபிஷேகம் செய்யப்படும்.
நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடத் தமிழகம் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது மாம்பழ சீசனை முன்னிட்டு ஆஞ்சநேயர் பக்தரான ரவிக்குமார் என்பவர் சார்பில் 500 கிலோ எடையில் நீல ரகத்தைச் சேர்ந்த சுமார் 1500 மாம்பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

  • Related Posts

    திருச்செந்தூர் போறீங்களா?…கடற்கரையில் இரவு இனி தங்க முடியாது!

    திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி…

    தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் கேரளாவிற்கு செல்லாது…திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன?

    தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *